சுடர் தமிழ்த் தேன்
சோலை வண்டிற்கு சுவை மலர்த் தேன்
சோம்பிக் கிடப்பவனுக்கு சுடர் தமிழ்த் தேன்
மழலை முத்தம் தாய்க்குத் தேன்
காதலில் கற்பிலும் களவிலும் இதழ்த் தேன்
கவிதையில் கவிஞனின் சொல் தேன்
தேனில் உயர்ந்தது கொம்புத் தேன்
நினைவெல்லாம் அவள் தேன்
ஆதலினால் அவளையே நினைத்தேன் !
~~~கல்பனா பாரதி~~~
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
