சாதி எங்கே
![](https://eluthu.com/images/loading.gif)
பள்ளியில் சேர்ந்தேன் குழந்தையாக இருந்த போது
சாதி சான்றிதழ்தனைக் கொடுத்து
பாடபுத்தகத்தில் படித்தேன்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
படித்தும் முடித்து விட்டேன் இன்று
கல்வியறிவு வளர்ந்தால் - அது
சாதியை போக்குமென்று...
ஆனாலும் தொடர்கிறது நெடுங்கதையாய்...
பணியாற்ற விரும்பினேன் அங்கேயும் கேட்டார்கள்
மறந்து போன என் சாதி சான்றிதழ்களை
என் ஞாபகத்திற்கு(ம்) வந்ததன்று
என்ன நான் செய்வேன் அதைக் காட்டிதான் சேர்ந்தேன்
இத்துடன் முடிந்துவிடுமென்று
சந்தோசமாய் மூச்சுவிடும் முன்
சாதீ மீண்டும் மூண்டுதான் எரியுதே இங்கு
இருமணம் இணைவதுதான் திருமணம் என்றார்கள்
ஒருவரை ஒருவர் விரும்பியதால் அதை
தவறு என்கிறார்கள் எதற்கு இந்த முரண்பாடு?
ஒரே இனம் என்றால்தான் காதலர்களை
இணைத்து வைப்போம் என்றார்கள்
நானும் அவளும் மானிட இனம்தான்
என்று வாதாடிப்பார்தோம் மூடர்கள்
அதை மறுத்துவிட்டார்கள்
ஐயகோ! என்ன செய்வது நாங்கள்
விரும்பிய ஒருவரை பிரிவது என்பது
அவ்வளவு எளிதா சொல்லுங்கள்?
கோவில் குளம் சுடுகாடென்று
பிறப்பு முதல் இறப்புவரை
கொடி க(கா)ட்டி பறக்குதிங்கே
எதுக்கும் உதவாத சாதிதான்
எங்கே போனதோ மானுட நீதிதான்?
எத்தனை காலத்திற்குதான்
சாதி சாகாமல் இருக்குமோ?
நிரந்தரம் இல்லா உலகில்
தொற்று நோயாய் அற்றுப் போகாமல்
தொடர்ந்து வருவதேன் வாழ்வில் ?
அதானே பார்த்தேன்
நிலையில்லா வாழ்வில்
அது என்ன ஆனது
இன்று செத்துதான் போனது!
அதுவும் ஒரு மருத்துவ மனையில்
எதிரி தன் உயிருக்காக போரடுமிடத்தில்
வீழ்ந்துதான் போனது! ஆம்,
இரத்தவெறி பிடித்த ஓனாய் சாதிக்கு
உயிர்வாழ இரத்தம் தேவைபட்டதால்
தேடி அலைந்து திரிந்த போதுதான்
தன் உற்றார் உறவினர் இரத்தம்
ஒத்துப் போகவில்லையே என
அழுது புலம்பிய போதுதான்
இரத்த சாதி மீது வெறுப்பு வந்தது போலும்...
அதுக்காகவா நீ இன்று சாக துணிந்தாய்...
இதோ எடுத்துக் கொள் என் இரத்தத்தை
நான் தான் உனக்கு எதிரியென்று நினைத்தாய்
ஆனால் உன் இனத்தார்கள் இரத்தம்தான்
உனக்கு ஒத்துப்போகவில்லை என்பதை உணர்ந்ததால்
உனக்கு நண்பனாய் உயிர் கொடுக்கும் தோழனாய்
நீ வாழ்வதற்காக தருகிறேன்
எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொ(ள்)ல்
உனக்கே சேரட்டும் என் இரத்தம்! B+