கூடாது
கீழே வீழ்ந்திடக் கூடாது மலர்கள்
மேலே எழக்கூடாது பாவிகள்
கண்ணீர் விடக்கூடாது கண்கள்
துயரம் படக்கூடாது பெ|ண்கள்
அழியக்கூடாது உண்மைகள்
பிரியக்கூடாது நல்ல இதயங்கள்
சிதறக் கூடாது தூய மனிதர்கள்
இங்கே சாகக்கூடாது நியாயங்கள்
மீண்டும் வளரக்கூடாது மடமைகள்
விளையக் கூடாது சாதிமதப் பேய்கள்
புதைந்திடக் கூடாது மனிதர்கள்
சிதைந்திடக் கூடாது உண்மைகள்
பெருகக் கூடாது கட்சிக் கொடிகள்
தொடரக்கூடாது ஊழல்கள்
இருக்கக் கூடாது போலிச் (ஆ)சாமிகள்
இருந்தால் பாவிகளை தண்டிக்கட்டும் கடவுள்கள்
ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது சட்டத்தில்
இருந்தால் தப்பிக்கக் கூடும் குற்றவாளிகள்
தவறு இங்கு நடந்தால்
வருவேன் மோகினியாட்டம்
நானும் செய்வேன் பித்தலாட்டம்!