என்னடா அவள மறக்க முடியலயா

டேய் நண்பா
நான் தான்டா

என்னடா தேதிதாள கிழிக்காம வச்சிருக்க

பிரபா
இங்க யாரு வந்திருக்கான் பாரு
என் ஃப்ரண்ட் வந்திருக்கான்
காஃப்பி போட்டு எடுத்துட்டு வா மா

டேய் உன் பொண்டாட்டி
இறந்து ஒரு வாரம் ஆகுதுடா
தேதி தாள் கிழிச்சியும்
ஒரு வாரம் ஆகுதுடா

என்னடா ?????


நான் அன்றிலேயே நின்றுவிட்டேன்
நாட்கள் நகரவில்லை
என்னில்
என் உலகில் அவள் இருக்கிறாள்
அவள் மாத்திரமே இருக்கிறாள்


நான் ஆடாமல் நின்றுவிட்டேன்
அவன் அப்படியே
உறைந்து விட்டான்
(என்பதை அறிந்து)




என்னடா
அவள மறக்க முடியலயா?

உன் உயிர
உன்னால மறக்க முடியுமாடா!!!!!
(அதான் அவ(என் உசுரு)).........................

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Jun-16, 7:32 am)
பார்வை : 231

மேலே