பித்த நோய் போக்கும் சோற்றுக் கற்றாலை
அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மூலிகை தாவரம்.
தன்னை விலங்குகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பிடிக்காத ஒரு வாசனையை வெளிப்படுத்தும். மஞ்சள் நிற திரவத்தை சுரந்து கசப்பை வெளிப்படுத்தும். கிடைக்கும் நீரை பாதுகாத்து வைத்துக்கொள்ளும். நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகாமல் இருக்க தன்உருவத்தை மாற்றிக் கொண்ட அற்புத மூலிகை. இன்னும் இதைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
உடலில் பித்தம் தன்னளவிலிருந்து அதிகமானால் சிறுநீரக கோளாறு, மலச்சிக்கல், மூலம், மாதவிடாய் கோளாறு, கரு தங்காமை, விந்தணுக்கள் இறந்து போதல், தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் உண்டாகும். இவற்றிற்கான சிறந்த உணவு சோற்றுக்கற்றாலை.
சோற்றுக் கற்றாலையை சேகரிக்கும் முன்பு அதை வணங்கி நன்றி சொல்லுங்கள். தேவைக்கு அதிகமான எடுக்காதீர்.
சோற்றுக்கற்றாலை இதழை தண்டுப்பகுதியிலிருந்து வெட்டியவுடம் பத்து நிமிடம் வைத்திருந்தால் மஞ்சள் நிற திரவம் வடியும். அது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். கொள்ளாது.
அது ஒரு சுவாரசியமான விஷயம். மற்றொரு சமயத்தில் அதைப்பற்றி பார்ப்போம். அத்திரவம் கசப்புடன் இருக்கும். அது வடியும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு பச்சை தோல்களை நீக்கி கண்ணாடி போன்ற சோற்றுப்பகுதியை நீரில் கழுவி உண்ணலாம். 7 முறை கழுவ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
ஆம் உண்மை தான். ஒரு முறை கழுவும்போது சிறிது கசப்பு இருக்கும். 7 முறை கழுவும்போது பிடித்தமான சுவையாக மாறி விடும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும்.