கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கவி

முத்துவேலின்
களம் கொடுத்த முத்தே
நீ தமிழுக்கு
நிலம் கொடுத்த சொத்தே

உன்னை அஞ்சுகம்
ஈன்றதாலோ உன்
நெஞ்சகம் யாருக்கும்
அஞ்சுவதில்லை

பாற்கடல் கடைந்து
அமுதேடுக்கவில்லை நீ
நூற்கடல் கடைந்தல்லவா
தமிழ் எடுத்தாய்

அகவை ஈரைம்பது ஆனாலும்
இயற்கையை தோற்கடிக்கும்
உன் இளமை

அகவை ஈராயிரம் ஆனாலும்
இந்தியை தோற்கடிக்கும்
உன் தலைமை

கர்ணன் நிதியை
ஏழைக்கு அள்ளிக்கொடுக்க
எடுத்த அவதாரமோ
கருணாநிதி

குழலினிது யாழினிது
என்பார் உன்
தமிழ் மொழி கேளாதார்

திரு மு கருணாநிதிதான்
தி மு க வோ

தேரைச் சொல்லி
பெருமைகொண்ட திருவாரூர்
இன்று உன் பேரைச் சொல்லியல்லவா
பெருமை கொள்கிறது

நெல் விளைத்தது போதுமென்றா
சொல் விளைத்தது உன் ஊர்

ஏசு பிறந்த தொழுவத்தில் அல்லவா
நீ கலை கற்று கலைஞனாய் ஆனாய்

தலைவா நீ
கதர் ஆடை அணியும்
கலைவாணி

குளித்தலை வென்ற
புலித்தலை நீ

தஞ்சாவூர் வென்ற
அஞ்சா தேர் நீ

சைதை வென்ற
வைகை நீ

அண்ணாநகர் வென்ற
அண்ணா நகல் நீ

சட்ட மேலவை சென்ற
சட்டமேதை நீ

துறைமுகம் வென்ற
பிறைமுகம் நீ

சேப்பாக்கம் வென்ற
கோப்பாக்கம் நீ

திருவாரூர் வென்ற
திருவாசகம் நீ

எழுதியவர் : குமார் (3-Jun-16, 10:25 pm)
பார்வை : 117

மேலே