நட்பென்றும் மறைவதில்லை
எங்கோ பிறக்கும் நதிகளே
சென்று கலக்கும் கடலிலே
அங்கே பிறக்கும் நட்பு
என்றும் மறக்குமா, மறக்குமா..........
மீன்கள் போல துள்ளினோம்
மான்கள் போல ஓடினோம்
காலம் கணித்த கணக்கு
இன்று கரைந்ததே, கரைந்ததே..........
கரைவதோ காலமே உந்தன்
நினைவுகள் என்றும் வாழுமே
நிலைக்குமே என்றும் நிலைக்குமே
இந்த நினைவுகள் என்றுமே..........
கண்கள் இரண்டும் நீரிலே
வெள்ளம் போல மாறுதே
மறக்குமா இந்த நாட்களே
என்றும் நிலைக்குமே நம் மனதிலே..........
- செ.கிரி பாரதி.