தேர்வு
கல்லூரி செல்லும் வழியில் .......................
செவியி்ல் இசைக்கும்
ஆனந்த ராகம்
அழகின் உருவமாய்
இயற்கையை ரசிக்க
சொல்லிடும் மனம்
தேர்வறை செல்லும்முன்
இருக்கும் நேரத்தி்ல்
படித்திடலாமென நினைப்பு ..................
கல்லூரி சென்ற பின்....................
நெடுநாள் கழித்து
சந்திக்கும் நண்பர்கள்
இத்தனை நாள்
பேசாத பேச்சையெல்லாம்
பேசிடுவோம் இருக்கும்
ஒருமணி நேரத்தில்...............
செவியை கிழிக்கும்
அளவிற்கு தூரத்திலிருந்து
மணி ஓசை
பேசிய இதழ்கள்
மௌனமாகி திடீரென
ஒருவரையொருவர் நோக்கி
கொள்ளும் பார்வை .................
தேர்வறைக்குள்...................
இதயம் வெடித்து
சிதறும் அளவுக்கு
நெஞ்சில் படபடப்பு
ஊற்றெடுத்து அருவியாய்
பெருகும் வியர்வை
சற்றும் எதிர்பார்க்காத
ஒருநிமிடம் மிரள
வைக்கும் கேள்வித்தாள்
கபாலம் கலங்க
வைக்கும் கேள்விகள்
அறியாது சுரந்து
விக்கி விக்கி
விழுங்கும் உமிழ்நீர்
பெருமூச்சு விட்டு
நண்பர்களை நோக்கி
ஓர் கழுகுப்பார்வை
எழுதும் முன்
இருக்கும் அருள்களை
எல்லாம் புரிந்திட
இறைவனிடம் வேண்டுக்கோள்
நினைத்து நினைத்து
நினைவில் இருப்பதை
என்ன எழுதுகிறோமென
தெரியாமலேயே பதில்கள்
எழுதும் சமயத்தில்
எங்கேயோ கேட்ட
பாடலின் மறந்துபோன
அடுத்த வரியின்
திடீர் நினைவு
ஒருபுறம் மனதில்
பாடல் ஓட
நயமாய் தாளமிடுவதாய்
கைகளும் எழுதுமே.....................
தேர்வறைக்கு வெளியே ........................
அடுத்த தேர்வில்
சரிவர எழுதிட
வேண்டுமென உறுதி
அளித்த உறுதியை
சூடிக்கொள்ளும் மறதி..................