சொர்க்கமே என்றாலும்
வந்து இறங்கினேன்
விண்ணில் இருந்து
இந்த இங்கிலாந்து
மண்ணிருக்கு -மீண்டும்
வந்து இறங்கினேன் ...
என்ன ஒரு வித்தியாசம்!!!
நம் தேசத்திற்கும்
இந்த தேசத்திற்கும் ..
ஆச்சிரியமாய் ..
அதிசயமாய்..
நான் கண்ட காட்சிகள்
இதுவன்றோ சொர்க்கம்
என ஒவ்வொரு மணித்துளிகளும்
என் நெஞ்சில் உதித்தன..!!!
காணும் இடம் எல்லாம்
பச்சை பசேல் என்று
புல் வெளிகள் ..
எறும்புபோல் சாரை சாரையாக
ஊர்ந்து செலும் வாகனங்கள்,
இருந்தும் ..
எங்கும் ஒரே அமைதி ,
காற்றில் கலக்க புகை இல்லை ,
காதை கிழிக்கும் சத்தம் இல்லை,
மனிதனை ஏமாற்றும் மனிதன் இல்லை ,
சாலைகளில் மரணம் இல்லை,
சட்ட விதிகளை மீற எவரும் இல்லை ,
வீதிகளில் குப்பை இல்லை,
வீண் பேச்சு பேச நேரம் இல்லை,
மந்திரி சென்றாலும் ஆரவாரம் இல்லை,
மக்கள் இடையே வேற்றுமை இல்லை ,
மரங்களை வெட்டும் மனம் இல்லை,
பள்ளிகளுக்கு கட்டணம் இல்லை ,
மருத்துவத்துக்கும் பணம் இல்லை ,
இலவசம் என்று ஏதும் இல்லை ,
பெரியவன் சிறியவன் என்று யாரும் இல்லை ,
இம்மண்ணில் இல்லை என்பதே இல்லை
இருந்தும்
இருந்தது என் மனதில்
எதோ ஒரு ஏக்கம் ...
எதோ ஒரு பாரம்...
என் தாய்த்திருநாட்டை
விட்டு வந்ததில் ...
வெறுத்து வரவில்ல...
விரும்பியும் வரவில்லை ..
நம் தேசத்திலும் இல்லாமை
என்ற நிலை உருவாகிட
விதையாய் நான்
வந்து விழுவேன்
விரைவில் ......
சொர்க்கமே என்றாலும்
அது நம் தேசம் போல வருமா????
என்றும்....என்றென்றும்....