ஆற்று மணல் உண்டு
பாலகனாய்
…..ஆரம்பப் பள்ளியில்
பயின்ற போது
…..எண்ணற்ற தோழர்கள்
கண்ணாமூச்சி விளையாட
…..நாங்கள்
கட்டிப் புரண்டு
…..சண்டையிட, வைகை
ஆற்று மணல் உண்டு!
…..குளித்து மகிழ்ந்திட
அங்கே ஓடுகால்
…..நீரும் உண்டு!
விடலைப் பருவத்திலே
…..நண்பர்கள் ஐந்தாறு!
ஊர் எல்லையிலே
…..தென்னந் தோப்பு!
தினமும் மாலையில் கூடி
…..தென்னை
இளநீரும் குடிப்போம்!
…..தெவிட்டாத
இனிய காதல் கதைகள்
…..பேசித் திளைத்திட,
மகிழ்ந்திடவும்
…..தோதான இடம் அதுவே!
முதுமைப்
…..பருவத்தில்.....!
ராசராசன், சந்தானம்,
…..குப்புசாமி
ராமராசு என முத்தான
…..நண்பர்கள் நாலு பேர்!
தனிமையிலும்,
…..துன்பத்திலும் தோள்
கொடுக்கும்
…..நட்புக்கு அவர்களே
ஒருவர்க்கொருவர்
…..துணை!