தலை சாய்க்க இடம் தருவாயா

""தலை சாய்க்க இடம் தருவாயா""


ஃபாம் ஃபாம்....
பேருந்தின் கடிகாரத்திற்கு
தெரியவில்லை,
இன்னுமொரு நொடியில்
நாம் இருவரும்
பிரிய போகிறோம் என்று. .!

தோள் கொடுக்கும்
தோழமையாக இருந்தாலும் ... என்றுமே
நீ எனக்கு விரல் நீட்டும்
கை குழந்தை தான்.....!
அதனால் தான் திரும்ப திரும்ப கூறுகிறேன். ..
பயணத்தின் போது
பத்தரமாக இரு என்று. ..!

ஆறரிவு உடையவளாக
இருந்தாலும். ...உன் மீது
அக்கரை காட்டுவதில்
எட்டா அறிவு இறைவனாகிறேன்....!

இரண்டு நாட்களில்
திரும்பி விடுவாய் என்று
தெரிந்தும் என்
தேடல் தொடர்கிறேன்...
நீ இல்லாத இடங்களில்
உன் நினைவுகளோடு....!

அரைமணி நேரத்தில்
ஆயிரம் வார்த்தை பேசும்
உதடுகளை விட
அரை நிமிடத்தில்
இரண்டாயிரம் கதை பேசும்
கண்கள் போதும். ...
உன் நினைவுகளை
எனக்கு கூற....!
கல கல என்ற சிரிப்பு. ..
குரு குரு என்ற பார்வை. ..
துறு துறு என்ற சேட்டை ..
உறவினருடன் இருக்கையில். ...
ஓர் பொறாமை...
அங்கு நானும் இல்லையே.......!

இப்பிறவி நமக்கு நீண்ட
இடைவெளி. ..ஆயினும்
ஓர் நப்பாசை. ...!
உன் தோள் மீது தலை சாய்த்து கடைசி வரை
பயணிப்பேன்....!
அன்பே இடம் தருவாயா..??
தோளில்
தலை சாய்க்க. ....!!

காத்திருக்கிறேன் உன் வருகைக்காக மட்டுமில்லாது. ..
பதில் வார்த்தைகாகவும்....!!



--- வினோ. வி....

எழுதியவர் : வினோ. வி.... (24-May-16, 3:37 pm)
பார்வை : 372

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே