கிசு கிசு

கிசு கிசு
----------

என்னைப் பற்றி
உன்னைப் பற்றி
எவரோ சொன்ன
வர்ர்த்தைகள்
கிசு கிசு.

பெண் நட்ப்க்குக்
களங்கமில்லை.
நன்மைக்கு
வழியுமில்லை.
கண் திறந்து
பார்த்தாலே
காமம் என்றால்
அன்னையைப்
பார்ப்பது பாவமோ?

அழுகையின் கண்ணீரை
ஆறுதலாய்த் துடைப்பது
அர்த்த இராத்திரி
கதையென்றால்
மனித நேயம்
கறிக்கடையில்
தொங்கும்
ஈ மொய்த்த
கறியோ?

விஞ்ஞான உலகத்தில்
விடுதலைக் கைவீசி
பெண்கள்
நடைபோடும்
இவ்வேளையில்
பார்ப்பதும்
பேசுவதும்
பாவமென்றால்
உங்கள்
எண்ணங்கள்
சிலுவையின் பிரதிபலிப்போ?

விரிந்த பார்வை
விசாலமான எண்ணம்தான்
ஒருவனை
ஞானியாக்கும்
உயர்ந்தவன் என
பெயரைச் சொல்லும்.

எம்.ஜி.ஆராக
நினைத்தால்
வேசம் போதுமே.
நடிப்பு எதற்கு?

காட்டுப் பூக்களை
கையில் வைத்துக் கொண்டு
வேட்டையாடுபவர்களுக்கு
தெரிவதில்லை
காட்டுப் பூக்கள் தெய்வமன்று!

சிகரெட்டுக்கு
உயிர் கொடுக்கும்
தீக்குச்சி போல
கிசு கிசு
சொன்னனையும்
அழிக்கும்,
சொல்லப்பட்டவனையும்
அழிக்கும்.

சில நேரங்களில்
மகிழ்வாகத் தெரியும்
கிசு கிசு

நாமே கண்ணுக்குள் இட்ட
துரும்பாகி
காயப்படுத்தாமல்
திரும்பாது.

நாஞ்சில் இன்பா.
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா. (23-May-16, 5:59 pm)
பார்வை : 156

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே