மனம் வருடும் மயிலிறகு -5

அறியா வயதில்
செய்த சேட்டைகளுக்கு
அளவே இல்லை...!

யாரோ என்னை
கடித்துவிட்டார்கள் என்பதால்
திரும்பி கடித்து
இரத்தத்துடன் இருவரும்
கண்ணை நனைத்திருக்கிறோம்...!

டீச்சருக்கு செல்லமாய்
இருந்ததாலோ என்னவோ
அன்று அடி விழாமல்
தப்பித்திருக்கிறோம்...!

மழலைக்குறும்புகள்
கடந்து
முதல் வகுப்பில்
அடியெடுத்து வைத்த பின்...
தினம் தொலைக்கும்
பென்சில் ...ரப்பர்
என நீளும் பட்டியலில்
புதிதாய் சேர்ந்தது
டிபன் பாக்ஸ்....!

ரப்பர் வச்ச பென்சில்
வாங்கி
எல்லாரிடமும் காட்டி
பொறமையை கூட்டிவிட்டு
அதை சீவியே கரைத்த காலங்களும்...
தொலைத்து விட்டு ...
பொய் சொல்லி
அடி வாங்கிய காலங்களும்
கண்ணோரம் வந்து
கதை பேசி போகுதிங்கே...!

(வருடல்கள் தொடரும்...)

எழுதியவர் : Geetha paraman (5-Jun-16, 12:19 pm)
பார்வை : 286

மேலே