சிறந்த நண்பன்
சொல்லும் முன்னே உதவிடுவான்
சொன்ன படியே நடந்திடுவான்
சான்றோர் முன்னே புகழ்ந்திடுவான்
தனியே சொல்லி திருத்திடுவான்
குடும்பத்தில் ஒருவனாய் ஆகிடுவான்
தடுமாறும் நேரம் காத்திடுவான்
இடம்மாறும் போது அழுதிடுவான்
"தடம்"மாறும் நேரம் தடுத்திடுவான்
தன்பசி மறந்தே பழகிடுவான்
நம்பசி போக்கி வாழ்ந்திடுவான்
சோகத்தை நட்பால் மாற்றிடுவான்
சொந்தமாய் என்றென்றும் இருந்திடுவான்
நண்பன் இதுபோல் இல்லையெனில்
நாமே இதுபோல் மாறிடுவோம்
நட்பை வானில் ஏற்றிடுவோம்
வாழும் வரைக்கும் போற்றிடுவோம்