காதலுடன் -பாகம் 10

சொற்களில்
அடங்காத
சொர்க்கலோக மங்கையவள்...
என்
விழிகளுக்கு மட்டும்
சொந்தமவள்......
அவளின்
மென்மை குணத்தில்
பல முறை
மனம் மெலிந்தேன்......
எத்தனை
முறைச் சொன்னாலும்
அந்த மூன்று வார்த்தை
எனக்கு
திகட்டாத தேனமுதே......
மேலைநாட்டு
காதல் நடனம்
நானும் அவளும்
ஆடினோம்
அவள் அன்னை
அவளை
அழைத்துச் சென்றாள்......
கோபத்தில்
விளைந்த செயலோ?...
கௌரவம்
கருதி நடந்ததோ?...
பித்து பிடித்தவனாய்
தவிப்பில் நான்......
கொழுந்து
விட்டு எரியும் நெருப்பாய்
மகிழ்ச்சி
அவள் முகத்திலிருந்தது...
அன்னையின்
செயலில்
அர்த்தம் புரியாது
நீரனைத்த முகமானாள்......
இருள்
கரையும் போதிலும்
என் இமைகள்
விரிந்தே இருக்கின்றது...
அனலிடை இட்ட புழுவாய்
அங்கம்
தூக்கமின்றி துடிக்கின்றது......
காதலுடன் ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
