தமிழச்சி மீதமிருக்கட்டும்…
நகரத்து நாகரீகத்தில்
ஆணுக்கு நிகராய் மாற எண்ணி
பெண்மையின் அடையாளம் தொலைத்து
ஆண்மகனின் போர்வைக்குள் ஒளிந்துகொண்ட
நாகரீக பெண்களின் நடுவே
நளினத்தின் உறைவிடமாய்
பெண்மையின் கூடாரமாய்
அழகின் உருவமாய்
என் கண் முன் நடந்து வந்த
கிராமத்து பெண் அவள்...
தன் அழகை மறைத்தபடி
மேலொரு வண்ணம் பூசி
அது அழகு என்ற மடமை கொள்ளாது
நடு வாகெடுத்து முடி சீவி
முகம் கழுவி பொட்டு வைத்து
தனது அழகை அதீதமாய்
காட்டி நின்ற பெண்ணவள்
வாசனை திரவியங்கள்
மேல் நாட்டு ஆடை வகைகள்
விலை மிக்க ஆபரணம்
இவை ஏதும் இல்லாமலே
தாவணியில் தன் அழகை
கூடுதலாய் காட்டியவள்
இன்று எங்கு என்று தெரியவில்லை
தேடி அலைந்து பார்க்கின்றேன்
விசாலாமாய் விரிந்து கிடக்கும்
நரகத்து(நகரத்து) நாகரீகத்தில்
தன்னிலை தொலைத்தாளோ
சுடிதாரை தன்னளவில்
அதீத நாகரீகம் என கருதியவள்
ஜீன்சுக்குள் மறைந்தாளோ
விவரம் ஏதுமில்லை
ஹே கிராமத்து பெண்ணே!
மாறி வரும் இவ்வுலகத்தில்
நீ மட்டுமாய் நீயாயிரு
நாளைய சமுதாயத்தில்
அழகுக்கு ஆதாரமாய்
தமிழச்சி மீதமிருக்கட்டும்…!!!