அதுவும் நானும் ஒன்றா
நான் சாப்பிட உட்கார்ந்ததும்
மினுக்கிடும் எங்கள் வீட்டு
குழல்விளக்கு (ட்யூப் லைட்! ட்யூப் லைட்!!)
நான் எழுந்ததும் பளிச்சிடுகிறது!
என் மனைவி வந்தாலும்
பளிச்சிடுகிறது! அதற்கென்ன பயம்!
நான்தான் பயப்படுகிறேன்,
அதுவும் நானும் ஒன்றா!