உன்னோடு நான்
என் கவிதையை நீ படிக்க
உன் மார்பில் சாய்ந்து
நான் அதை கேட்க
உலகம் அசையாது நிற்கும்
உன் குரல் மட்டும் கேட்கும்
*****
உலகம் மறந்து போவேன்
உன்னில் கரைந்து போவேன்
உலகம் பனிமழை பொழியும்
உன்னில் நான் நனைந்து போவேன்
உன்னில் உறங்கிடுவேன்
உன் கைகளை
என் மீது போட்டுக்கொண்டு
நீ ஏது(எது)
நான் ஏது
இல்லா(தெரியா) வண்ணம்
நாம் வாழுவோம்
உடைகள் இல்லா உலகில்
உருவமில்லா பிரபஞ்சத்தில்
பூக்கள் பூமியில்
காதல் எனும் புள்ளியில் நாம் சேர்ந்திருப்போம்
உலகம் நம்மில் இருந்து பிறக்கட்டும்
வான் வெளி
நிலவில்
விண்மீன் ஒளியில்
புது பூமியில்
இருவர்
எனும்
ஓர் உயிர்
வாழும் உலகம்
எங்களின் பிரபஞ்சம்
~ பிரபாவதி வீரமுத்து