வீதியில் அவதி
மாற்றம் மாற்றம் முன்னேற்றம்
நமக்கு எப்போ தெரியலையே
ஏற்றம் காணும் வாழ்க்கைமுறை
என்று கிடைக்கும் புரியலையே
ஏழை என்றும் ஏழைதானோ
காசு இல்லாட்டி மூளைவீணோ
குடிசை வாழ்க்கை தொடரும்தானோ
தினமும் பட்டினி இடரும்தானோ
உழைக்க அரியணை ஏறுகிறார்
தன்பிழைப்பை மட்டுமே நடத்துகிறார்
ஜெயிக்க வைத்தவன் வீதியிலே
ஜெயித்தவர் எங்கே காணவில்லை
அடிப்படை வசதிகள் கிடைக்கணும்
அடிக்கடி முன்னேற்றம் இருக்கணும்
இருக்குற காட்சிகள் மாறணும்
பொறுப்பாய் அரசாங்கம் நடக்கணும்
வீதியில் அவதிகள் குறையணும்
சாதியும் மதுவும் மறையணும்
மக்களின் நம்பிக்கை பெருகணும்
மாண்புமிகு தலைவர்கள் உழைக்கணும்