முதல்சிறகு நூல் -- வாழ்த்துமடல் -- இன்னிசை வெண்பாக்கள்

முதல்சிறகை இன்றுநீ முத்தாய்ப்பாய் வென்றாய் .
விதவிதமாய்ப் பாக்களால் வித்தகனாய்த் துள்ளிப்
பதங்களையு மொன்றுசேர்த்துப் பக்குவமாய் நின்றே
இதமாகச் சாற்றினா யின்று .


இன்று வெளியிட்ட இந்நூல் சிறகடித்து
நின்று நிலைநாட்டும் நின்புகழை எந்நாளும்
வென்ற விவேக்கினது வெற்றிதனைச் செப்பிட
மன்றி லெழுதிய மண் .


மண்ணில் பிறந்தாய் மகவாய்த் தமிழ்த்தாய்க்கு
விண்ணில் விருட்சமாய் விந்தையென நின்றிட்டாய்
கண்ணில் கவிதைகள் காட்சியாய் வந்திடவும்
பண்ணில் வனைந்திட்டேன் பா .


பாசத்தால் பாவலரும் பண்பாக வந்திடவும்
வாசமிகு நற்றமிழில் வாழ்த்தை வழங்கிடவும்
நேசமுடன் நின்றிட்டாய் நேர்த்தியான வித்தகனாய்.
சாசகமாம் இந்நூலே சான்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Jun-16, 10:44 pm)
பார்வை : 54

மேலே