காற்று
என் மூச்சுக்காற்றை தொலைத்துவிட்டேன்
இருக்குமிடம் தெரிந்தும் தேடி அலைகிறேன்.
தினம் எனை தீண்டிதான் செல்கிறது
இருந்தும் கண்களுக்கு தெரியவில்லை..
வீசும் திசையெல்லாம் விழிகள் போக
காத்துகிடக்கின்றேன் கிடைக்குமென்று.
காலையில் தென்றலாய் வந்து
மாலையில் மையலை தந்து
காற்றே
கண்களில் படாமல் செல்கிறாயே இதுதான் உன் விந்தையா..
மூச்சை உள்ளிழுத்து
உனை பிடித்துவிட்டதாய் பெருமிதம் கொள்கிறேன்.
அடுத்தநொடி எனை பிரிகிறாயே..
உயிரோடுதான் இருக்கிறேன் மீண்டும் மீண்டும்
என்னுள் வந்துசெல்வதால்... By_குவை