முகமூடி முகங்கள் 2

வாழ்க்கையில் தோல்வி (அ) எதிர்பாராத இடைவேளை
ஏற்படுகையில் அதற்கு பின்னால் இருக்கும் வலிகள் வரிகளில்...


----------------------------------------------------

அடுத்து நொடி என்ன நடக்கும்
அடுக்கடுக்காய் பயங்கள்..
நடக்கக்கூடாதெல்லாம்
நடப்பது போல் ஏடாக்கூட கற்பனைகள்..!


ஆளில்லாத தெருகள்
தேடிகள் ஓடுகிறேன்..
அங்கு ஒரு பொய்
இங்கு ஒரு பொய் பேசுகிறேன்..!



செய்யாத தவறுக்கு கைத்தூக்குகிறேன்..
தினம் தினம் நெஞ்சைப் பதம் பார்க்கிறது
அம்புகள் குற்றணர்ச்சிளாய்..!


என் பொறுமைகள் எல்லாம்
பொறாமையாய் மாற
தடுமாறி கால்களும் தவறான
வழிகளில் நடைபோட..
யாரிடமும் பேச முடியாமல் எனக்குள் நானே பேசிகொள்(ல்)கிறேன்..!


கண்மூடி தூங்க
விழிகளோடு போராட்டம்..
தூக்கத்தில் பிறக்கிறேன்
விழித்ததும் இறக்கிறேன்..!


என் முகத்தை வெளியே காட்டாமல்
எனக்குள் எனையே மறைத்துவிட்டு
யாருக்கு நான் எப்படி வேண்டுமோ
அப்படியே நொடிக்கு நொடி
முகமூடி மாற்றும் நடிகனாகிவிட்டேன்..!


கண்முன்னே நரகம்
விரக்தியின் விளிம்பில்
கடவுளை தேடினேன்..


உள்ளிருந்து சத்தமாய் ஒரு குரல் கேட்கிறது
"எரிக்க எரிக்க எழுந்து வா"


கண்டுபிடித்துவிட்டேன் கடவுளை...!
கரைசேர்ந்துவிடலாம்
நகருகிறேன் நம்பிக்கையோடு...!


- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (5-Jun-16, 4:58 pm)
பார்வை : 795

மேலே