அவள் வாசனை

வீதியொன்றின்
சந்துக்குள்
பாய்ந்தோடிக்கொண்டிருந்த
எரிமலையின்
சுவாசத் தீக்காற்றில்...

தன் சுய வாசனையை
வேருடன் அறுத்து
எரித்து சாம்பலாக்கி
காற்றுக்கு தீனியிட்ட பின்
உன் வாசனையை
வியாபித்து
தன்னுடையதாய் நிறுத்தி...

என்னை மயக்க நிலையில்
தள்ளிவிட்டுச் செல்கிறது
அந்த மல்லிகைப் பூக்கள்...

எழுதியவர் : ரா.லோ.சரவணன் (6-Jun-16, 8:28 am)
Tanglish : aval vasanai
பார்வை : 573

மேலே