ராலோசரவணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராலோசரவணன் |
இடம் | : பவானி,தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 04-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 12 |
கிறுக்குவது பிடிக்கும்
கணவனிடம் கிடைக்காத பாசம்
உன்னிடம் கிடைத்தபோது
நான் திக்கற்று நின்றேன்
உன்னிடம் நானும் அன்பு கொண்டால்
அயலார் அதனை கள்ளக்காதல் என்கின்றனர் நான் என்னென்று சொல்ல!
வானப் பாயை உருவி
படுக்கை விரித்து
நிலவுத் தலையணையில்
தலை சாய்த்து
இருள் போர்வையைப் போர்த்தி
விழிக்கதவினைத் தாழிட்டு
துயில் வாய்க்குள் குதித்து
கனவுப் பெருவெளியில்
எழுகையில்
கருப்புக் கரடிகளும்
வெள்ளைப் பேய்களும்
அங்குமிங்கும்
அலைந்துகொண்டிருந்தன...
என் வரவை எதிர்நோக்கி..
வீதியொன்றின்
சந்துக்குள்
பாய்ந்தோடிக்கொண்டிருந்த
எரிமலையின்
சுவாசத் தீக்காற்றில்...
தன் சுய வாசனையை
வேருடன் அறுத்து
எரித்து சாம்பலாக்கி
காற்றுக்கு தீனியிட்ட பின்
உன் வாசனையை
வியாபித்து
தன்னுடையதாய் நிறுத்தி...
என்னை மயக்க நிலையில்
தள்ளிவிட்டுச் செல்கிறது
அந்த மல்லிகைப் பூக்கள்...
வானப் பாயை உருவி
படுக்கை விரித்து
நிலவுத் தலையணையில்
தலை சாய்த்து
இருள் போர்வையைப் போர்த்தி
விழிக்கதவினைத் தாழிட்டு
துயில் வாய்க்குள் குதித்து
கனவுப் பெருவெளியில்
எழுகையில்
கருப்புக் கரடிகளும்
வெள்ளைப் பேய்களும்
அங்குமிங்கும்
அலைந்துகொண்டிருந்தன...
என் வரவை எதிர்நோக்கி..
வீதியொன்றின்
சந்துக்குள்
பாய்ந்தோடிக்கொண்டிருந்த
எரிமலையின்
சுவாசத் தீக்காற்றில்...
தன் சுய வாசனையை
வேருடன் அறுத்து
எரித்து சாம்பலாக்கி
காற்றுக்கு தீனியிட்ட பின்
உன் வாசனையை
வியாபித்து
தன்னுடையதாய் நிறுத்தி...
என்னை மயக்க நிலையில்
தள்ளிவிட்டுச் செல்கிறது
அந்த மல்லிகைப் பூக்கள்...
மண்ணிலிருந்து எகிறி
மின்னல் வேகத்தில்
விண்ணை
முட்டிக் கிழித்து
ஒரு பறவையின் இறகாய்
தரையிறங்கி...
பூகம்பமாய்
பூமியை பிளந்து
பாதாள குகையின்
இருளுக்குள்
ஒரு குட்டி எலியாய்
அங்குமிங்கும் ஓடி...
ஒளிந்து கொள்ள
முயன்றுகொண்டிருக்கிறது
எவருடனும் ஒத்துப்போகாத
ஒரு சுயம்...
குழாயில் முகம் கழுவி
நிலைக்கண்ணாடியை பார்க்கையில்
காலத்தின் பசிக்கு
இரையான இளமையை எண்ணி
மனம் கலங்கி சிறு துளி கண்ணீர்
கசியும் சில நேரங்களில்....
அக்கால லீலைகளும்
பல அத்தியாயங்களும்
மனச்சுவற்றில் கிறுக்கப்பட்டு
பத்திரமாகவே உள்ளது
எவர் கண்களுக்கும் புலப்படாமல்...
முகத்தில் தங்கிவிட்ட
காயங்களின் வடுக்கள்
அன்று நடந்தேறிய ரணமான
சம்பவத்தினை நினைவு கூறும்...
எது எப்படியோ...
இவை நான்கு சுவற்றில்
அடைந்து கிடக்கும்
நிலை கண்ணாடிக்கும்
எனக்குமான பகிர்தல்....
அது மனிதர்களை போல்
வெளியே எவரிடமும் கூறாது
மிகவும் கண்ணியமானது...
குழாயில் முகம் கழுவி
நிலைக்கண்ணாடியை பார்க்கையில்
காலத்தின் பசிக்கு
இரையான இளமையை எண்ணி
மனம் கலங்கி சிறு துளி கண்ணீர்
கசியும் சில நேரங்களில்....
அக்கால லீலைகளும்
பல அத்தியாயங்களும்
மனச்சுவற்றில் கிறுக்கப்பட்டு
பத்திரமாகவே உள்ளது
எவர் கண்களுக்கும் புலப்படாமல்...
முகத்தில் தங்கிவிட்ட
காயங்களின் வடுக்கள்
அன்று நடந்தேறிய ரணமான
சம்பவத்தினை நினைவு கூறும்...
எது எப்படியோ...
இவை நான்கு சுவற்றில்
அடைந்து கிடக்கும்
நிலை கண்ணாடிக்கும்
எனக்குமான பகிர்தல்....
அது மனிதர்களை போல்
வெளியே எவரிடமும் கூறாது
மிகவும் கண்ணியமானது...
மண்ணிலிருந்து எகிறி
மின்னல் வேகத்தில்
விண்ணை
முட்டிக் கிழித்து
ஒரு பறவையின் இறகாய்
தரையிறங்கி...
பூகம்பமாய்
பூமியை பிளந்து
பாதாள குகையின்
இருளுக்குள்
ஒரு குட்டி எலியாய்
அங்குமிங்கும் ஓடி...
ஒளிந்து கொள்ள
முயன்றுகொண்டிருக்கிறது
எவருடனும் ஒத்துப்போகாத
ஒரு சுயம்...