கனவுப் பெருவெளியில்

வானப் பாயை உருவி
படுக்கை விரித்து
நிலவுத் தலையணையில்
தலை சாய்த்து
இருள் போர்வையைப் போர்த்தி
விழிக்கதவினைத் தாழிட்டு
துயில் வாய்க்குள் குதித்து
கனவுப் பெருவெளியில்
எழுகையில்
கருப்புக் கரடிகளும்
வெள்ளைப் பேய்களும்
அங்குமிங்கும்
அலைந்துகொண்டிருந்தன...
என் வரவை எதிர்நோக்கி..

எழுதியவர் : ரா.லோ.சரவணன் (6-Jun-16, 8:40 am)
Tanglish : kanavup peruveliyil
பார்வை : 105

மேலே