கையிலே ஏதுமின்றி

மங்கள நாளையெண்ணி
மலர்ந்தும் மலராத பூப்போல
சமஞ்சு நிக்கும் பருவபெண்ணாய்
விளஞ்சு நிக்கும் நெற்பயிர்

தைப்பொங்கல் நந்நாளில்
தைத்தையென குதித்து
பொங்கி மகிழ
பொறுத்திருந்த வேளையிலே

கள்ளிப்பால் கொடுத்து
கதை முடித்த பெண் சிசுபோல்
கருமாரி ஆத்தா
கொட்டி தீர்த்த மழை நீரால்

விளஞ்சு நின்ன நெல்லுமணி
விதி முடிஞ்சு போனதுபோல்
தல சாஞ்சு வீழ்ந்து
தரை தொட்ட நிலைகண்டு

கருவிழி உருமாறி
கருமாரியாய் மாறிவிட
கதறி புலம்புறேனே
கையிலே ஏதுமின்றி.

எழுதியவர் : கோ. கணபதி. (6-Jun-16, 11:33 am)
Tanglish : kaiyile edhuminri
பார்வை : 85

மேலே