விடையில்லா புதிர்
விடையில்லா புதிர்
-------+++-++++++++++
விடையில்லா புதிரொன்று
ஆட்டிவைக்கிறது
தமிழகத்தில் இருக்கின்ற
அரசில்வாதிகளை!
பெர்முடா முக்கோணம் பேசுகிறேன் கேளுங்கள்!
எனைச் சூழ்ந்துள்ள மர்மங்கள்
எனக்கே புரியாத புதிர்
இதற்கான சரியான விடை
எனைப் படைத்த இயற்கை
அன்னைக்கே தெரிந்த
அற்புதமான மர்மம்!
ஐநூற்று எழுபது புதிராகப் போனது
தமிழக அரசியல்வாதிகள் சிலருக்கு.
நாள்தோறும் அவரெழுப்பும்
இடியோசைக் கேள்விகள்
எனக்கே தெளிவாய் கேட்கையில்
தமிழகத்திற்கு வெளியே பிற இந்திய மாநிலத்தவர்களும்
ஊடகத்தாரும்
செவிப்பதபுலன் இல்லா மாற்றுத் திறானிகளா?
எனைச் சூழ்ந்த மர்மங்கள்
ஐநூற்று எழுபது கொடியையும்
கெட்டியாகப் பற்றியதோ?
இயற்கை அன்னையாலும்
இந்தப் புதிருக்கு விடை காணமுடியாது!
மனிதர்கள் இயற்கை விதிகளை வீழ்த்தி
எத்தனையோ கேடுகளை
கொள்ளையடித்து செல்வராக
பணம் பொறுக்கும் பாவிகள்தானே!