ஆசை மகள்

ஆசை மகள் கேட்டாள் ஒரு பொம்மை
ஆசைப்பட்டுக் கேட்டாள் அப்பொம்மை
தையில் வாங்கித் தருகிறேனென்று
வாக்கு ஒன்று கொடுத்துவிட்டேன்
தையில் வாங்கித் தந்திடுவேன்
அந்த நம்பிக்கை எனக்குமுண்டு
கையில் சேர்ந்தது கொஞ்சம் பணம்
பையில் இருந்தது அந்த பணம்
பொம்மையும் வாங்கிக் கொடுத்துவிட்டேன்
வாக்கையும் நானும் காத்துவிட்டேன்
வாழ்வேப் புதிதாய்ப் பிறந்தது போல
மகளும் அடைந்தாள் சந்தோஷம்
மகளின் ஆசை சிறியது.!
மகள் என்னும் உறவோ பெரியது.!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (7-Jun-16, 8:13 am)
Tanglish : aasai magal
பார்வை : 190

மேலே