மயக்கும் கருவி

உலகம் முழுதும்
உலாவி வந்து
அனைத்து மக்களையும்
அலசி பார்த்தால்

எத்தனை சாதி !
எத்தனை மதம் !

பரந்த பாரினில்
பார்க்கும் மனிதரெல்லாம்
அன்னையை தாண்டி
அகிலத்தில் வணங்குவது

அண்டத்தை படைத்த
அருவமான நாயகன்
இறையை வணங்குபவன்
இயற்கையை வணங்குவதே
நியாயம் !

ஆனால் இங்கே...................

அகிலத்தை படைத்த
இறைவனுக்கு மதிப்புண்டு !
அதே
இறைவன் படைத்த
மனிதனுக்கும் மதிப்பில்லை !
மனிதனுக்காக படைத்த
இயற்கைக்கும் மதிப்பில்லை !

மனிதனுக்கு மதிப்பு
இல்லாத காலத்தில்
மனிதன் படைத்த
மயக்கும் கருவி
பணத்திற்கு மட்டும்

எத்தனை மோகம் !
எத்தனை மதிப்பு !

மனிதனை படைத்தவனுக்கும்
மனிதன் படைத்ததே
காணிக்கை !

படைத்தவன் திருவடி
சேராது தான்
படைத்ததின் காலடியில்
கிடக்கின்றான் !

அவன் என்றும்
காலத்திற்கே இரை !

எழுதியவர் : புகழ்விழி (7-Jun-16, 10:21 am)
Tanglish : mayakkum karuvi
பார்வை : 73

மேலே