தீபிகா

இரவுக் குமிழ்கள் பகல் நுரை
மீது கொண்ட காதலால்
பிறந்த கோளக் குழந்தையோ உன் கண்கள்!!!! ....
நாணல் கீற்றுகளின்
வளைந்த ஊற்றுகளோ வஞ்சியின் வன புருவங்கள்.....
வளைந்த கீற்றுகளின் வளையாத சாலைகள்
இரு வரிகவிதையில் தான் முடியுமோ..???
இரு வரிகவிதையது பற்க்குவியல்
அரங்கத்தில் நாவின் நளின அரங்கேற்றத்தில்
பிரசவிக்கும் சொற்குவியல்களின் குழைந்த வண்ணமோ?????
என் எண்ணச் சிதறல்களின் எழுதாப் படைப்புகளுக்கு
வாழ்வளிக்கும் அழகிய கன்னமோ??!!
மதுமேகக் கிண்ணத்தின் மந்திரப் புன்னகையில்
பொன் நகையும் சிவந்து நிற்குமோ நாணங்கொண்டு !!!!!
யாருமறியா என் கற்பனைக் காவியங்களை
உன்னை ஈன்றவளறிந்து இன்னிசை
ஓவியமாக்கி விட்டாளே!!!!!!
ஐயகோ!!!!
ஓவியத்தின் ஒரு மச்சம் மட்டும்
என்னை யாசிக்க வைக்கிறதே!!!
கற்பனைக் கிடங்குகளில் காணாத
கரும்புள்ளி ஒன்று ஓவியத்தின்
உச்சத்தை அடையச் செய்கிறதே!!!
உன் கருங்குழலின் கதகளியில்
காற்றும் லயித்து நின்றது...!!!!!
உன் சங்கு கழுத்தில் தோன்றும்
சர்வ நாதங்களும் சங்க தமிழின் இசை ஆயிற்று...!!!
என் ரசனைகளின் தேடல்களுக்கு
உயிர்மெய் வனப்பு கொடுத்தவளே!!!
என் ரகசிய பாடல்களுக்கு
ரசவாதம் நிகழ்த்திச் சென்றவளே!!!!
ஆயிரம் உறவுகளையும் அன்பெனும்
ஓர் வார்த்தையில் அடக்கி ஆள்பவளே!!!!
புத்துனர்சியின் புகலிடமே!!!!
பெண்மையின் பூரணத்துவமே !!!!
பத்தாம் நூற்றாண்டில் பாரதி கண்ட புதுமை பெண்ணோ!!
நாற்றிசைகளிலும் நட்பு கொண்டு
நலன் பயக்கும் நல்லிணக்கச் சாரலோ!!!??
தீஞ்சுவை அன்றி தீய சுவைக்கு
செவி சாய்க்காது இருப்பதால் தீபிகா என பொதுபெயரோ ???
இல்லை ஓயாது தன் எழுத்தாணி முனைகளில்
சுடரேற்றும் தீப ஒளி என்பதால் தீபிகா என காரணப்பெயரோ???!!!!

எழுதியவர் : குயில் (7-Jun-16, 4:39 pm)
பார்வை : 561

மேலே