உரசல்
என் இனியவளே!
உன் உமிலத்தை
மையாக்கி விரலால்...
என் உடலில்
நீ!
தீட்டிய கவிதைகள்...
காயத் துவங்கி விட்டன!
என் மார்பிலே!
புதைந்து மரகத...
முத்தமிடும் உன்
வதனம்!
நெஞ்சுக்கு கிடைத்த...
சீதனம்!
என் வதனத்தை வருடிய
உன் கார்கூந்தல்...
இருளில்
சிக்கிக்கொண்டன...
என் மீசைமுடிகள் சில!
மீட்டெடுக்க,
என் இனியவளே!
காத்திருக்கிறேன்!
உன் வருகைக்காக!
நினைவுச் சின்னங்களாக!
என் கருத்த மேனியில்...
சிவந்த தரளங்கள்!
உன் உதட்டால்...
நீ!
தீட்டிய அழகோவியம்!
உன் நாவிலே
ஆழ்ந்து ஆராய்ந்து...
தேன்உமிழங்களை...
பருகி!
உன் மடியிலே இளைப்பாற...
வேண்டும்!
அமுதம் சுரக்கும்...
பாற்கடலில் (அவள் உதடுகள்)
என் உதடுகள்...
பள்ளிக்கொள்ள
வேண்டும்!
நம் விரல்களின்...
உரசல் சொல்லும்...
அன்பின் பல
அத்தியாயங்களை!
உந்தன் விழியின்...
கணைகள்!
மழையென பொழிந்து...
என் உடலை நனைத்துவிட...
என் இனியவளே!
காத்திருக்கிறேன்!
உன் வருகைக்காக!
உன் மூச்சுக்காற்று...
தென்றலாய் என்
தேகம் தழுவ!
எம்மனதில்
மையம்கொண்ட...
உன் நினைவெனும்...
புயல்!
கரையை கடந்திட!
என் இனியவளே!
காத்திருக்கிறேன்!
உன் வருகைக்காக!
நான் உறங்கும்...
வேளையில்
விழித்திரைக்கு மட்டுமே...
ஒய்வு!
சுவனத்தில் என்றும்
உன் பவனமே!
மீண்டும் நான்...
உறங்க வேண்டும்
உன் வளையல்களின்..
ஓசையிலும்!
கொலுசின்
சங்கீதத்திலும்!
என் இனியவளே!
காத்திருக்கிறேன்!
உன் வருகைக்காக!