சின்னதாய் என்னுள் ஓர் ஆசை

சின்னதாய் என்னுள் ஓர் ஆசை.....
துளித்துளியாய் உன் நினைவு..
இமை திறந்தேன்...
விழியருகே விடியலாய் நீயில்லை...
வார்த்தை கேட்டேன்...
செவியருகே சொல்லாய் நீயில்லை.
உச்சரிப்பை தந்தேன்...
உதடோரம் உணர்வாய் நீயில்லை...
பாதம் வைத்தேன்...
பாதையருகே பாசமாய் நீயில்லை...
பாவை நீ எங்கோ...
நான் இங்கு உன்னையறியாமல்...
இந்த நொடி என்னாசை...
எந்த நொடி என் முன் நீ வருவாயோ..
என ஏங்குகிறேன் உனக்காக..

எழுதியவர் : (8-Jun-16, 9:49 am)
பார்வை : 62

மேலே