அன்புள்ள கணவா
கள்ளிச்செடி
காட்டுப்புறா
கட்டிக்கோடா
கண்டபடி
கடல் கடந்து
தாய்மடி சேர்ந்து
முத்தமிட்டேன்
தாய்மண்ணை
அள்ளித்தின்றேன்
உருண்டு பிரண்டேன்
எந்தன் தாய்மண்ணில்
எங்கே இருக்கிறாயடி
உன்னோடு சேர தானடி
வந்தேனடி
இனி உனை விட்டு
ஒரு நொடி பிரியேனடி
என்னை அள்ளி தின்னடி
என்னை கட்டி
முத்தம் வையடா
உயிரும் உடலும்
பிண்ணிபிணையட்டுமடி
நிஜமும் நிழலும் கலக்கட்டுமடா
பொங்கி எழும் அலை கடல் என் மனமடி
உனை சேரும் வரை அடங்காதடி
உனை பார்க்க தானடா என் கண்கள்
உனக்கும் எனக்கும்
இடைவெளியே இல்லையடா
நீ இருக்கும் இடத்தில் தான் நானும்
இருப்பேனடா
உன் மார்போடு சாய்ந்து கதை நூறு பேச வேண்டுமடா
உயிரை ஏந்திகொள்ள வேண்டுமடா
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
எங்கிருந்தாலும்
உடைத்துக்கொண்டு வருவேனடா
உன் அருகில்
என்னை கட்டிக்கொள்ளடா.......
எந்தன் உதட்டு சாயம்
உந்தன் இதழில் பதிய வேண்டுமடா
எந்தன் நெற்றி பொட்டை
உந்தன் மார்பில் சுமந்திட வேண்டுமடா
எந்தன் நாணத்தை ஏற்றுக்கொள்ளடா
உந்தன் சட்டைக்குள் நானடா
உந்தன் வாசம்
என்னை கடத்திடுமடா
உன்னில் வீழ்ந்தேனடா
உன்னில் வாழ்ந்தேனடா
~ பிரபாவதி வீரமுத்து