சகல தோஷங்களை போக்கும் பிரம்மன் ஸ்தலம்

பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

ஜாதகத்தில் உள்ள சகல விதமான தோஷங்களும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை ஸ்தலத்தில் உள்ள பிரம்மன் நீங்குவர்

தல சிறப்பு
இங்கு மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.

பிரம்மன் வழிபட்டது
திருமால், பிரம்மன் ஆகிய இருவருமே, தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன். இல்வனற்பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக்காண புறப்பட்டுதேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார், பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார், பெருமன் பிரம்மனை அன்னமாகும்படி சபித்தார் பிரம்மன் பிழை பொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்ற இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரமனும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டர், பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது.

இங்கு அவரவர் தங்கள் ஜாதகத்தை பிரம்மன் சன்னதியில் பிறந்த நட்சத்திரத்தன்று வைத்து வணங்க சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (8-Jun-16, 8:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே