பேதம்

மங்கிப்போன மானுடன்
பார்வையில்தான்
ஒன்று கருடன்
ஒன்று காகம்...
ஒன்றிணைந்த அவற்றின்
பார்வையில் இரண்டும்
புள்ளினம்
அவ்வளவே!
மதவாத மடையர்
கருத்தில்தான்
ஒன்று அதிர்ஷ்ட்டம்
ஒன்று தரித்திரம்!
ஓரினமான அவற்றின்
பொது எதிரி மனிதன்!
ஆறறிவு தலைக்கு மேல்
ஐந்தறிவு அளாவுவது
அதனால்தான்!
நன்மை தீமை
அதிர்ஷ்ட்டமென
தவழும் புள்ளினம்
தம்மேலும் வருணாசிரம்
வகுத்துச் சென்ற
அழுகிய மனங்கள்
அவை மீது
அவற்றின் பார்வை
என்னவாய் இருக்கும்?!