கற்றவர்க்குரிய நெறி

.தேசுந் திறனறிந்த திட்பமும் தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை-ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றா ரினத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி.

(பதவுரை) தேசும்-கீர்த்தியும், திறன் அறிந்த திட்பமும்-நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய், தேர்ந்து உணர்ந்து-மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்து, மனத்தகத்து மாசு இல்லாமை-மனத்திடைக் குற்றமில்லாமல், ஆசு இன்றிக் கற்றல்-மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும், கடன் அறிதல்-தனது கடமையை அறிதலும், கற்றா ரினத்தராய் நிற்றல்-கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே நெறி-எல்லையினையுடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

குறிப்பு) இல்லாமை: எதிர்மறை வினையெச்சம். வரைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று. ஏ: அசைநிலை. )

எழுதியவர் : (12-Jun-16, 5:07 am)
பார்வை : 71

மேலே