சிரிப்பு அடித்தது கொள்ளை

பார்வை இனிமை
குரலோ புதுமை
சிரிப்பு அடித்தது கொள்ளை
அதற்கு ஈடோ இல்லை
முழுதாய் மயங்கி
பக்கம் செல்ல
அவளோ விலகி
வெட்கம் கொள்ள
காட்சியை வர்ணிக்க
கவிஞன் இல்லை
காதலை கற்பிக்க
கடவுள் இல்லை
இது நேற்று நடந்தது
இன்று நினைவில் வந்தாடுது
காலையில் தூங்கி எழுந்ததும்
கனவென அப்போதுதான் புரிந்தது...