அவள் பாதம் பட்ட இடம்

அவள் பாதம் பட்ட இடமெல்லாம்
தண்ணீர் பாய்ச்சப்போகிறேன்
பாலைவனமும் பூஞ்சோலையாக
தேனீக்கள் தேடி வந்து
தேன் வீழ்ந்து மயங்க

காளையர் கண்கள் கண்டு
தினமும் இரசிக்க
கவிதை பல வடிக்க
முனிவனின் தவம் தடுக்க

அவள் பாதம் பட்ட இடமெல்லாம்
தண்ணீர் பாய்ச்சப் போகிறேன்

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Jun-16, 12:48 pm)
பார்வை : 458

மேலே