இது காதலின் ஆடை

கீறல்களாக
கிழித்துக்கொண்டிருக்கிறாய்
என் உடல்
உனக்கான தையல் இயந்திரம்

நடு இரவு பயணமாக
இந்த வாழ்வின் ஆடையில்
நீ தைத்த படங்கள்
உனக்கான வரலாற்றினை
சொல்லிக்கொண்டே இருக்கும்

இப்பொழுதெல்லாம்
தினமும் நீ தைத்த
காதல் ஆடையைத்தான்
அணிகிறேன்...

நமது அன்பு
அகங்காரத்தின்
நிர்வாணம்
இதுதான் காதலின்
பரிசுத்த ஆடை

எழுதியவர் : கோபிரியன் (12-Jun-16, 9:28 pm)
பார்வை : 147

மேலே