மனங்களில் பிரிவினை

கானக் குயில் கூவும்
தோகை மயில் அகவும்
கொஞ்சும் கிளிகள் கீச்சிடும்
கதிர் மலரும் காலை நேரம்......


சில்லென்று வீசும் காற்றில்
சிலிர்த்தத் தேகம் ஒன்று
முளைத்தப் பயிர்களை விளைவிக்க
வெண்கரை நதியில் மடைத் திறந்தது......


மறைந்துப் பார்த்த இரு விழிகள்
கம்பிகளில் பாயும் மின்சாரமாய்
வெட்டறுவாள் வேல்கம்புடன்
ஒருக் கூட்டமாய் வந்து நின்றன......


தனிமையில் நின்ற அவனுக்கும்
கத்தியும் குத்தீட்டியும் சுமந்து
திரண்டு வரும் வெள்ளமாய்
தனிப் படை வந்துச் சேர்ந்தது......


எங்கள் நதி நீரை எடுத்து
நிலம் சென்ற உன்னை
கொன்றுக் குருதிக் குடிப்பேன்
கோபக் கனலில் இங்கு ஓர் குரல்......


அருகே நீ நெருங்கிப் பார்
குருதிக் குடிக்கும் முன்னே
உன் குரவளை அறுப்பேன்
அனல் பறக்க அங்கு ஓர் குரல்......


கீழ் இமையும் மேல் இமையும்
கொலை வெறிக் கொண்டு
பாரத யுத்தம் கண்டது......


கைகள் இழந்து கால்கள் இழந்து
தலைத் தனியே முண்டம் தனியே
வெட்டப் பட்டு உயிர்கள் ஊசலாடின......


இமைகள் போராடும் களத்தில்
உயிர்களின் குருதி வழிந்தோடி
வெண்கரை செங்கரை ஆனதே......


வான் மழைத் தந்த நீரில்
மாற்றான் நனைந்தால் நதி வற்றிடுமோ?...
அவன் என்ன சாபம் பெற்றவனா?......


அரும்புகளில் குறும்பு மட்டும் இருந்தது
மலர்ந்ததும் வன்மம் எங்ஙனம் நுழைந்தது
ஏனிந்த மாற்றம் மனிதா?......


எத்தனை உயிர்கள் யுத்தத்தில் இழந்தாலும்
காலம் காலமாய் இன்னும்
மனித மனங்களில் பிரிவினைத் தீ
அனையாது கொழுந்து விட்டு எரியுதே......

எழுதியவர் : இதயம் விஜய் (12-Jun-16, 8:45 pm)
பார்வை : 112

மேலே