இருட்டு இலக்கு
நாடு முன்னேறாம போனதுக்கு காரணம்
ஏழைக்கு
'தைரியம்' இல்லை.
நடுத்தர வர்க்கத்திற்கு
'நேரம்' இல்லை.
பணக்காரனுக்கு
'தேவை' இல்லை.
நாடு முன்னேறுதுன்னு சொல்றதுக்காரணம்
அரசாங்கத்துக்கு,
'அப்படி சொன்னாதான் நல்லது',
ஏழைக்கு,
உசுப்பேத்தும் நம்பிக்கை 'விடியப்போகிறதென்று'
நடுத்தர வர்க்கத்திற்கும்
'தப்பு ஒண்ணும் நடக்கலை, அதுவரைக்கும் பரவாயில்லை.'
பணக்காரனுக்கோ,
'நம்ம வேலையைப்பாப்போம், எல்லாமே நல்லாத்தானே போயிட்டிருக்கு'.
நாடு முன்னேறலைங்கிறதுக்கு அடையாளம்
உலகவங்கி கடனும் உற்பத்தி குறைவும்;
ஏழைக்கு -
இலவசமும் இழுத்தடிப்பும்;
நடுத்தர வர்க்கத்திற்கு -
பற்றாக்குறையும் நிராசைகளும்;
பணக்காரனுக்கு -
எதார்த்தமின்மையும் சமூக அக்கறையின்மையும்.
விடியல்
வெகு தொலைவில் இருக்கும்,
நெருங்க நெருங்க
இன்னும் தொலைவில் சென்றிருக்கும்..
ஏனெனில் இந்த தேசம்,
ஏழைகள் பலியாகும்
நடுத்தரவர்க்கம் வெந்து சாகும்
பணக்காரன் ஆளும் தேசம்
பணக்காரனுக்காக பணக்காரனால்
பந்தாடப்படும் ஜனநாயகம்...
அதில்
நல்லவன் என்பது யாரும் அடைய விரும்பாத இலக்கு,
கெட்டவன் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கும் இருட்டு.