செல்லக் குட்டி
செல்லம் என்
செல்லம்
நீதானடா என்
உலகம்...
செல்லக்குட்டி
நீயின்றி
என்னைச் சுற்றி
கவலையும்
கண்ணீரும்
என் உறவாய்ப்
போச்சு.....
காணொளித்
தொடர்பில்
காண்கிற
உன் குறும்புகள்
ஒவ்வொன்றும்.....
நானே அறியாத
தவறுக்கான
தண்டனைகள்
ஆயினவே......
மழலை மொழி
கேட்காமல்
மணித்துளிகள்
எல்லாமே
எனக்கு
மரணத்தின்
நுழைவாயில்
என்றாகிப்போனது......