என்னையும் எடுத்துச் செல்
எங்கும் நிறைந்தவளே
உனை காணாது
காய்ந்த சருகானேனடி....
உன்குரல் கேளாது
செவியிரண்டும்
உணமாய் போனதடி
வெகுநாளாய்
பசித்திருக்கிறேன்
உன்னால்....
வயிற்றுக்கு
வெந்த உணவு போதுமடி..
நொந்த மனதிற்க்குன்
பார்வை வேண்டுமடி.....
செந்தமிழ் பேசும்
பைங்கிளியே
கொஞ்சும் தமிழ் பேசடி....
வறண்டு போன
நெஞ்சினை
உன் வார்த்தையால்
ஈரமாக்கு...
வானம்பார்த்த பூமி போல
உன்னை பார்த்து
காத்திருக்கிறேன்...
என்னவளே
நீ செல்லும்போது
என்னையும் எடுத்துச் செல்...