எனது தேடல்

நிறைமாத வலியாய்
கிளர்ந்து வளர்கிறது
என் இரவுப் பொழுதுகள்.
நீல நிறச் சுடர்கள்
முளைத்தெழுகின்றன
என் உடல் கூடையிலிருந்து.
நினைவுப் பறவைகள்
சித்திரங்கள் வரைவிக்க
இருள் அல்லாத ஒளி ஒன்று
ஒரு மாயமாய்
என்னைச் சுற்றுகிறது.
வாய்ச் சொற்களற்ற
காற்றின் ஓசையில்
சலனப் படமென நகரும்
வினாடி முட்களில்....

கொஞ்சம் துவர்ப்புடன்
துவங்குகிறது...
நிலவுக்கும் கனவுகளுக்கும்
இடையிலான
எனது தேடல்.

எழுதியவர் : rameshalam (14-Jun-16, 8:58 am)
Tanglish : enathu thedal
பார்வை : 219

மேலே