அகல்யா
பருவமோ பதினாறு
ருசியோ பலநூறு !
அள்ளி பருகவே அத்தான் நானுண்டு...
ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியை !
யாரென்று நானறியேன்..
ஆனால்.....
என் ஆயுள் முழுதும் வாங்கிய
அழகிய சிறுபூவை நீ !
என நான் அறிவேன் ....
என்னிடம் உன்னை விட்டுவிடு
இல்லை...
பறித்த என் உள்ளத்தை
என்னிடமே விட்டுகொடு .....
* உன்னை தென்றல் காற்றென்றேன் - நான் என்ன
அயலாரைஎல்லாம் தொட்டு
தழுவுகுறேனா என முறைக்கிறாய் !
* உன்னை மலர் என்றேன் - நான் என்ன
வாடி வதங்கி மாலையில்
மடிகிறேனா என முனுமுனுக்கிறாய் !
* உன்னை மதி என்றால் - நான் என்ன
குன்றி பெருகும் குணம்
கொண்டவளா என குறைகூறுகிறாய்
* இனி என்னதான் நான் செய்ய
* இனி என்னதான் நான் சொல்ல
* முடியவில்லை என்னால் -
---என் முயற்சி அனைத்தையும்
உன் ஓரக்கண்ணால் முறியடிக்கிறாய் !!!
--- என்னை வதைக்கிறாய் , வாட்டுகிறாய்
ஆனாலும் ஒரு இதமான சுகம் எனக்கு !!!!
---உன்னை நினைத்து பிதற்றினேன் , புலம்பினேன்
உன் உள்ளம் அறியா மூடனானேன் !!!!
* இனி என்ன செய்தால்
நீ என் வசம் வருவாய் ......
@@@@@
*நீ நீயாய் இரு
இயல்பாய் இரு
என்றும் இனிமையாய் இரு
இன்முகத்துடன் இன்பமாய் இரு - அது போதும்
@@@இப்படிக்கு அகல்யா @@@
என்று நீ அனுப்பிய குறுஞ்செய்தி விடையானது எனக்கு !!!!!!