திருமணம்!
ஆண்மையினுள்ளே
மென்மையும்
மிளிரும்!
பெண்மையில்
சிறிதாய்
ஆண்மையும்
அரும்பும்!!
இமைகளின்
பணிகள்
முடங்கிட
விழிகள் பேசும்
விந்தை தொடரும்!
எதிர்ப்படும்
வேளைகளில்
இதயத்தின்
துடிப்போ
இரட்டிப்பாகும்!!
ஆதி அந்தமில்லா
அன்பில்
திளைத்திட
அருகாமை
தேடும்!
ஓய்வில்லா
உரையாடல்களின்
நடுவே சிறு சிறு
வெட்கப்புன்னகை
மலரும்!!
தனிமைகள்
இனிமையென
உலகமும்
உருமாறும்!
இதயத்தின்
எடையேற்றம்
நடை உடை
பாவனை
மாற்றும்!!
நாட்களை
எண்ணியபடி
நகம் கடித்தே
விரல்களும்
விருப்பப்பொருளாகும்!
மாலை மாற்றிட
மஞ்சள் தாலியிலும்
நெற்றிக் குங்குமத்திலும்
நிறைவேறும்
நீண்ட நாள்
கனவது
'திருமணம்' எனும்
உறவாய்!!...