வேண்டும் விழிப்புணர்வு

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ சோதனைக்கான முயற்சி மீண்டும்
துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கதிரியக்க அபாயம் ஏற்படாது என தமிழ்நாடு
அறிவியல் இயக்கமும் சுற்றுச்சூழல் மாசடையாது என தேனி மாவட்ட மாசுக்
கட்டுப்பாட்டு வாரியமும் கருத்துத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல
நியூட்ரினோ ஆய்வகம் அமைந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என ஆசைகாட்டி
மக்களைக் கவரும் வேலையும் நடைபெற்று வருகின்றது. ஆனால் வீட்டுக்கு
ஒருவருக்கு வேலை கொடுப்பதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. மேலும் அணுக்
கதிர்கள் கசிவதற்கான வாய்ப்பிருக்கின்றது. அடுத்து நீரியல் நிலநடுக்கம்
ஏற்படும். தேனி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் வேளாண் ஆதாரம்
முழுமையாகப் பாதிக்கப்படும். எனவே தேனி மாவட்ட மக்கள் கூடுதல்
விழிப்புணர்வோடு செயல்பட்டால்தான் அவருடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க
முடியும்.
- கேப்டன் யாசீன்,

எழுதியவர் : கேப்டன் யாசீன் (14-Jun-16, 10:22 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : vENtum VILIPPUNARVU
பார்வை : 324

மேலே