காதல் கீதம்

காதல் கீதம் ஒன்று
நெஞ்சிலே நானும் இசைத்தேன் !

காற்றில் மிதந்து வரும் !
உன்னை தானே சேரவரும் !
சேரும் கனம் இன்பம்
பல தேடி வரும் !

மழலையை போல பேச்சிலா..............
கவிதையை போல மௌனத்திலா..............

எதிலே விழுந்தேன் !
எண்ணி தவழ்ந்தேன் !
மயங்கி கிடந்தேன் !
இன்பங்கள் வளர்த்தேன் !

எனக்கும் தெரியவில்லை - என்
காதலுக்கும் புரியவில்லை !

கனவிலும் தினமும் நீயடி !
வருவது ஏனோ சொல்லடி !
காதல் சொல்லும் பூங்கொடி !
ஒருமுறை என்னை பாரடி !

முக்கனிச் சுவையே !
முத்தமிழ் அழகே !
பவளக் கொடியே !
பொன்மயில் நடையே !

எத்தனை வர்ணனை.................
உன்னை நான் எண்ணும்போது..............


விண்ணில் இருக்கும் நிலவுமே
உன் அழகை கண்டு மயங்குமே !
பஞ்ச வர்ண கிளியுமே
உன் அறிவை கண்டு வியக்குமே !

மெல்லிடைச் சிலையே !
மூன்றாம் பிறையே !
சித்திர பாவை நீ !
செங்கதிர் சோலை நீ !

வார்த்தைகள் தேடி தேடி
உன்னை நான் வர்ணிப்பேனே !

வர்ணிக்கும் வார்த்தைக் கொண்டு
காதல் சொல்லி முடிப்பேனே !

காதல் வார்த்தை நீயும் கேட்க
கீதம் நானும் இசைத்தேனே !

எழுதியவர் : புகழ்விழி (15-Jun-16, 12:58 am)
Tanglish : kaadhal keetham
பார்வை : 305

மேலே