வலி சுமக்கும் வரிகள்

வலி சுமக்கும் வரிகள்

அன்பே அன்பே
எந்தன் பேரன்பே....உனக்குப்
பின்தான்
இந்த உலகமென்பேன்
என்னுலகம்
நீயான பின்னே.....!!

இருப்பது ஒரு
உயிர் தான்.....அதை
இழப்பதும்
வாழவைப்பதும்
உன் மூச்சுக்
காற்று மட்டுமே
என்றுதான்
சொல்வேனே......!!

நினைவெல்லாம்
நீதான்.....
நிஜமாய்
கனவிலும் நீதானடி.....
என்னைச் சீண்டும்
நிமிஷங்கள்
சில்மிஷம்
செய்து போவது
கண்டு.....சிலமணித்துளிகள்
கனத்தது
என் மனசு.....!!

உன்னோடு கதைத்த
பொழுதுகள்....
இன்னும் இன்னும்
இதமாய் என்னுள்......
மௌனித்துப் போன
நிமிடங்கள்
முதல்..... இன்றுவரை
பதைபதைத்துக்
கொண்டே பகலிரவு
தெரியாமல்
மாறுது.....!!

எங்கே நீ
சென்றாலும்
எல்லைகள்
எனக்கில்லை....
விண்ணையும்
தாண்டி....
உன்னையும்
மீட்பேன்....இது
காதல்
மீது
சத்தியம்.....!!

சிறு கோடும்
ஓவியம் தான்.....
சிறுபிள்ளை
கிறுக்கலும்
வண்ணமயம்
தான்.....ரசனை
உள்ள.....உள்ளம்
கண்டுகொண்டால்.....!!

நதியோரம்
நீ நடந்தால்.....
நதி எங்கே
என்கண்ணில்
தெரியவா போகிறது....
உன்னழகில்
உலகை மறந்து
வானம்
தொடுவேனே.....!!

எழுதியவர் : thampu (15-Jun-16, 3:07 am)
பார்வை : 923

மேலே