என்னவென்று சொல்லுவேன் - என்னவளை

நொடி பொழுதில்
என் ஆண்மையை
வென்று விடுகிறாய்!

தெருமுனை வளைவுகளில்
உன் இடை
கங்கையின் வளைவுகளை
நினைவூட்டுகிறது!

யாருமறியா நேரத்தில்,
எனை பார்க்க,
நீ வீசும் ஒற்றை பார்வையில்,
புலிகளின் ஒற்றன் படையும்
தோற்றிடும்!

உன், இதழ் விரித்து,
என் பெயர் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
சப்தசுவரங்களும் உன்னை
சரணடையும்!

என்னவென்று தெரியவில்லை,
உன் கண்கள் பார்த்து
பேச நினைத்து,
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்!
என் கண்கள்,
எங்கு மேயும் என
உனக்கு சொல்ல தேவையில்லை!

அழகான ஓவியம் வரைய
தூரிகை எதற்கு?
உன்,
இதழின் ரேகை போதும்!
என் நெற்றியில்,
அதை பதித்துவிட்டால்
அதற்கு விலையேது?

என்னவளின் எச்சில்,
எனக்கு அமிர்தம் என்பேன்!
பேதையே, கொஞ்சம் நீ மனது வைத்தால்,
இதழ் வழியே
அமிர்தம் பெற்று கொள்வேன்!

அது என்னவோ தெரியவில்லை!
உன் பாதம் பட்டு
மரணமடைய
சாலையோர பூக்கள்
சண்டையிட்டு கொள்கின்றன!

நட்சத்திரமும் நானும்,
ஒன்றா என்றாய்?
ஆம்!
கிட்ட வந்தால் எட்டி செல்கிறாய்!
தொட துணிந்தால்,
சட்டென மறைகிறாய்!

என்னிடம் எது பிடிக்கும் என்றாய்?
உன் புருவம் என்றேன்!
ஏன் என்றாய்?
நான் புருவம் என்றவுடன்
இரு வானவில் வந்தது,
அதனால் என்றேன்!

பொய்யாக உன்னிடம் சண்டையிட்டு
முத்தங்களை,
பெற விழைகிறேன்!
ஆனால், நீயோ
மௌனமாய் இருந்துவிட்டு
என்னிடமே பெற்று கொள்கிறாய்!

உன் விரல் பிடித்து நடக்கையில்,
சர்ர்ரெனெ மின்சாரம் பாய்கிறது!
அணைத்து பிடிக்க
முயலும்போது தான்,
சாலையென ஞாபகம் வருகிறது!

இரவினில் எது பிடிக்கும், என்றாய்!
'விடுதலை' என்றேன்!
ஏன் என்றாய்!
'உன் உடைகளுக்கும் விடுதலை'
பிடிக்கும் என்றேன்!

வெட்கம் கொண்டு,
முகம் புதைத்தாய்,
இன்னும் ஏன் தாமதம்? என
என் கைகளால்
விடுதலை கொடுத்தேன், விடியும் முன்னே!

எழுதியவர் : Sherish பிரபு (15-Jun-16, 5:05 am)
பார்வை : 2110

மேலே